↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கோலிவுட்டில் மிக அதிக ரசிகர்களை கொண்ட முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, நேற்று முதல் பிரபல முன்னணி சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளார். அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட சூர்யா, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் காட்டும் அன்புக்கு கட்டுப்பட்டு அதில் இணைந்ததாகவும்  குறிப்பிட்டார். சமூக வலைத்தளத்தில் இணைந்த சூர்யாவுக்கு அவரது ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.
இந்நிலையில் சூர்யாவின் மனைவி ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரீ எண்ட்ரி ஆகியுள்ள படத்தின் பெயரையும் அவர் நேற்று அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். ஹவ் ஓல்ட் ஆர் யூ' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடித்துள்ள படத்தின் பெயர் '36 வயதினிலே' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த டைட்டில் முடிவு செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகிய போதிலும், நேற்று இந்த படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் சூர்யா, அதிகாரபூர்வமாக டைட்டிலை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் ஜோதிகா, ரகுமான் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ளார். இவர் மலையாளத்தில் 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top