↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விஜய் நடித்த ப்ரெண்ட்ஸ், காவலன் படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் சித்திக், தற்போது இயக்கி வரும் மலையாள திரைப்படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'.  மம்முட்டியும் நயன் தாராவும் ஏற்கனவே மூன்று மலையாள படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் அவர்கள் இணையும் நான்காவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் மம்முட்டி, நயன்தாரா, ஹரிஸ்ரீ அசோகன், ஜனார்த்தன் உள்பட பலர் நடித்துள்ளனர்.தீபக் தேவ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்திக் இயக்கிய இந்த படத்தை ஆண்டோ ஜோசப் தயாரித்துள்ளார்.

மலையாளத்தில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் குறித்து புதிய தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளது. சித்திக் இயக்கிய ப்ரெண்ட்ஸ், காவலன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவருடைய மூன்றாவது படமும் தமிழில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top