↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சிம்புவின் வாழ்க்கையில் எத்தனையோ பெண்கள் இடையிடையே வந்து போனாலும், அவர் கடைசி வரை மறக்க முடியாத ஒரு பெண் அவரது தாயார் உஷா ராஜேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. உலக மகளிர் தினத்தை அடுத்து தனது தாயார் மற்றும் குடும்பத்தினர்களுடன் 'வாலு' படத்தின் பிரிவியூ காட்சியை சிம்பு பார்த்ததாகவும், படத்தை பார்த்த உஷா ராஜேந்தர் சிம்புவை கட்டிப்பிடித்து மிகச்சிறப்பாக படம் வந்துள்ளதாக பாராட்டியதாகவும் செய்திகள் கூறுகின்றன.

சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ், பிரம்மானந்தம், சலீம் கெளஸ், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்திருக்கும் வாலு படத்தை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். எஸ்.தமன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு சக்தி ஒளிப்பதிவும், டி.எஸ்.சுரேஷ் எடிட்டிங்கும் செய்துள்ளனர். நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் மாதம் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த 'போடா போடி' படத்திற்கு பின்னர் வெளியாகும் சிம்பு திரைப்படம் 'வாலு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது என்றும் அந்த பாடலில் சிம்புவுடன் சரோஜா தேவி, குஷ்பு, சிம்ரன் ஆகிய நடிகைகள் நடனம் ஆடவுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top