↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஜெயம் ரவி-ஹன்சிகாவின் காதல் கொண்டாட்டம் ரோமியோ ஜுலியட்-ஸ்பெஷல் - Cineulagam
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்தமான ஜோடி என்று சிலர் இருப்பார்கள். அந்த வகையில் எங்கேயும் காதல் படத்தின் மூலம் அனைவர் மனதையும் கொள்ளை கொண்ட ஜெயம் ரவி-ஷன்சிகா ஜோடி மீண்டும் ரோமியோ ஜுலியட் படத்தின் மூலம் இணையவுள்ளனர்.
இப்படத்தை எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த லஷ்மன் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது.
இதையெல்லாம் விட இப்படத்தில் டி.இமான் இசையில் அனிருத் பாடிய ’டண்டனக்க’ பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது. இப்படத்தின் ஆல்பம் மார்ச் 12ம் தேதி சென்னையின் முக்கியமான திரையரங்கு ஒன்றில் வெளியிடவுள்ளனர்.
படம் ஏப்ரல் 10ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறையில் தமிழக இளைஞர்களுக்கு இந்த ரோமியோ ஜுலியட் செம்ம விருந்து தான்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top