தனது அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
நயன்தாராவுடன் நடிப்பது குறித்து ஜெயம் ரவி கூறியதாவது:– நயன்தாரா எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் எனக்கு ஜோடியாக நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அவருக்கு பதில் அசின் தேர்வாகி விட்டார். அப்போது அசின் பிரபலமாக இருந்ததால் அவரை நடிக்க வைத்து விட்டோம்.
இப்போது தனி ஒருவன் படத்தில் சேர்ந்து நடிக்கிறோம். நயன்தாரா திறமையான நடிகை, அழகாகவும் இருக்கிறார். தனி ஒருவன் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் வருகிறார் என்றார் ஜெயம் ரவி.
0 comments:
Post a Comment