↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

டி.ராஜேந்தர் இயக்கிய 'காதல் அழிவதில்லை' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சார்மி, அதன் பின்னர் 'ஆஹா எத்தனை அழகு, லாடம் உள்பட பல தமிழ், மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். கடந்த பல வருடங்களாக தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த சார்மிக்கு தற்போது படவாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் அவர் தற்போது 'ஜோதிலட்சுமி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பூரி ஜெகந்நாத் இயக்கும் இந்த படத்திற்கு சுனில் காஷ்யப் இசையமைக்கின்றார். பி.ஜி.விந்தா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு எஸ்.ஆர்.சேகர் எடிட்டராகவும் வித்தல் கோஷனம் கலை இயக்குனராகவும் பணிபுரிய உள்ளனர். பாஸ்கரா பாட்லா இந்த படத்தின் பாடல்களை எழுதுகிறார்.

உலக மகளிர் தினமான நேற்று இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசர் சார்மி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் நடிகைகள் மிகக்குறைந்த காலம்தான் பீல்டில் இருக்கின்றனர். அந்த குறைந்த காலகட்டத்தில் அவர்கள் அனுபவிக்கும் இடையூறுகள், பிரச்சனைகள், துன்பங்கள் குறித்து படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top