↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கிரிக்கெட்டை கண்டு பிடித்த நாடு,.. 3 முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நாடு என்ற பெருமைகள் கொண்ட இங்கிலாந்து இதுவரை உலக கோப்பையை ஒருமுறை கூட முத்தமிட்டது கிடையாது. குறிப்பாக, 1992 உலக கோப்பைக்கு பிறகு அந்த அணி கீழ் நோக்கி பயணித்து, இப்போது காலி பெருங்காய டப்பாவாக காட்சியளிக்கிறது. 1975ம் ஆண்டு முதல் முறையாக உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போட்டியில், அரையிறுதி வரை முன்னேறிய இங்கிலாந்து, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.

1979ம் ஆண்டு 2வது உலக கோப்பையில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் அரையிறுதியில் மோதின. இங்கிலாந்து 9 ரன்னில் வெற்றி பெற்று முதல்முறையாக பைனலுக்குள் சென்றது. இறுதி போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் 92 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்று மீண்டும் சாம்பியன் பட்டம் பெற்றது.

1983ம் ஆண்டு அரை இறுதியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானை தோற்கடித்தது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பைனலில் மோதின. அதில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை முத்தமிட்டது.

1987ல், 4வது உலக கோப்பை போட்டி முதல் முறையாக இங்கிலாந்துக்கு வெளியே நடந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. அரை இறுதியில் இந்தியா 35 ரன்னில் இங்கிலாந்திடம் தோற்றது. எனவே, இங்கிலாந்து 2வது முறையாக, பைனலுக்குள் சென்றது. பைனலில்ஸ ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 253 ரன் எடுத்தது. இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 246 ரன்தான் எடுத்தது. இதனால் ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலியா 7 ரன்னில் வென்று முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.


1992ல் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. முதலில் ஆடிய பாகிஸ்தான் 249 ரன் எடுத்தது. இங்கிலாந்து 227 ரன்னில் ‘ஆல் அவுட்' ஆனது. இதனால் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் 22 ரன்னில் வென்று முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. 3 முறை பைனலுக்கு சென்றும், கோப்பையை வெல்ல முடியாத அணி என்ற மோசமான சாதனை இங்கிலாந்துக்கு கிடைத்தது.

ஆனால் 1992க்கு பிறகு இங்கிலாந்து பிற அணிகளுக்கு பெரும் சவாலாக இருக்கவில்லை என்பது புள்ளி விவரத்தை பார்த்தால் தெரியும். 1996 உலக கோப்பையின் லீக் சுற்றில், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய பெரிய அணிகளிடம் இங்கிலாந்து தோற்றது. இருப்பினும், காலிறுதியில், இலங்கையிடம் தோற்று வெளியேறியது.

1999ல் இங்கிலாந்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டி நடந்தது. ஆனால் சொந்த மண்ணில்கூட 2வது ரவுண்டுக்கு தகுதி பெற முடியவில்லை இங்கிலாந்தால்.

2003ல், முதல் ரவுண்டுக்கு பிறகு வெளியேற்றப்பட்டது இங்கிலாந்து. பாகிஸ்தானுடன் மட்டுமே அப்போது நல்லபடியாக வெற்றி பெற்றது இங்கிலாந்து. மற்ற வெற்றிகள் குட்டி அணிகளுடன் மட்டுமே.

2007ல், வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பையில், கென்யா, கனடா, அயர்லாந்து போன்ற குட்டி அணிகளையும், இலங்கையையும் வீழ்த்தியது இங்கிலாந்து. ஆனாலும், அரையிறுதிக்குள் நுழைய முடியவில்லை.

2011ல் தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீசுடன் சிறிய வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்தியாவுடனான போட்டி டிராவில் முடிவடைந்தது. ஆனால் காலிறுதியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையால் துவம்சம் செய்து வெளியேற்றப்பட்டது.

இதோ, இப்போது 2015 உலக கோப்பையில், காலிறுதிக்கு போககூட தகுதி பெற முடியாமல் குட்டி அணியான வங்கதேசத்துடன் உதைபட்டு வெளியேறியுள்ளது, ஜென்டில்மேன் கேமை கண்டுபிடித்த இங்கிலாந்து.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top