↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
‘வீரம்’ படத்தை தொடர்ந்து அஜித், தற்போது கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ளார்.
இதில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா, அனுஷ்கா நடித்துள்ளனர். மற்றும் அஜித்துடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் விவேக்கும் நடித்துள்ளார். இதற்கு முன்பு அஜித்-விவேக் இருவரும் எட்டு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இது இருவரும் இணையும் 9வது படம். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தது குறித்து தனது அனுபவங்களை விவேக் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்…
“என்னை அறிந்தால்’ படத்தில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே, டுவிட்டர், ஃபேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அஜித் மீது வெறி பிடித்துள்ள ரசிகர்கள் ‘என்ன கதை, தல எப்படி இருக்கார்னு கேட்டே கொன்னுப்புட்டாங்க, பாசக்காரப் பசங்க…
இந்தப் படத்தில் எனக்கு சீரியசான, ஒரு குசும்புமிக்க கதாபாத்திரம். சிரிக்கவும் வைக்கும், சிந்திக்கவும் வைக்கும். எடுத்த காமெடி காட்சிகளில், எத்தனை எடிட்டர் ஆன்டனியின் கத்திரிக்குத் தப்பியிருக்கிறதோ, ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
படப்பிடிப்பில் கில் எடுத்ததையெல்லாம், படத்தில் இருந்து எடுத்துவிடாமல் வைத்தால், எனது திரையுலக வாழ்க்கையில் இப்படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும் ” என்கிறார் விவேக். என்னை அறிந்தால் படம் உலகம் முழுவதும் வரும் 5ம் தேதி திரைக்கு வரவிக்கிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top