↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பொங்கல் தினத்தன்று விக்ரம் நடிப்பில் ‘ஐ’, விஷால் நடிப்பில் ‘ஆம்பள’ என இரண்டு பெரிய படங்களுக்கு மத்தியில் ஜி.வி.பிரகாஷின் ‘டார்லிங்’ படமும் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இது படக்குழுவினர்ககளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த படத்திற்கு மேலும் ஒரு மகுடம் சேர்க்கும் விதமாக விஜய் ‘டார்லிங்’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினர்களை பாராட்டியுள்ளார்.

டார்லிங் படத்தை விஜய்க்காக பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளனர். படத்தை விஜய் மிகவும் ரசித்து பார்த்து விட்டு மிகவும் சிறப்பாக எடுத்திருக்கிறீர்கள் என்று இயக்குனர் பாராட்டியுள்ளார். மேலும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார்.

விஜய்யின் பாராட்டு டார்லிங் படக்குழுவினருக்கும் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top