↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ரோஹித் சர்மா ரன் அவுட்டாகி விட்ட நிலையில் இந்தியா நிதானமாக ஆடி வருகிறது. தென் ஆப்பிரிக்காவின் வேகப் பந்து வீச்சை தகர்த்து அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி ஷிகர் தவான் அசத்தி வருகிறார். கோஹ்லி சரியான வாய்ப்புக்காக காத்திருக்கிறார். 10 ஓவர்கள் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரன் அவுட் ஆகி விட்டார். இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதே அணிதான் இறங்கியுள்ளது.

உலகக் கோப்பைப் போட்டிகளில் இதற்கு முன்பு 3 போட்டிகளில் மோதியுள்ளன. மூன்றிலும் தென் ஆப்பிரிக்காவே வென்றுள்ளது. எனவே இன்றையை போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

அணிகள்: 

இந்தியா - ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, அஜிங்கியா ரஹானே, டோணி, ரவீந்திர ஜடேஜா, ஆர். அஸ்வின், முகம்மது ஷமி, மோஹித் சர்மா, உமேஷ் யாதவ். 

தென் ஆப்பிரிக்கா - ஹசிம் அம்லா, குவின்டன் டி காக், பாப் டு பிளஸ்ஸிஸ் ஆப் டிவில்லியர்ஸ், மில்லர், ஜேபி டுமினி, பிலான்டர், பர்னல், டேல் ஸ்டெயின், இம்ரான் தாஹிர், மார்னி மார்க்கல்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top