↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஜெயலலிதாவின் பிடிவாதத்தால் அதிகாரிகளும், அலுவலர்களும் இடநெருக்கடியில் சிக்கியிருக்கிறார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கலைஞரின் கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை:

கேள்வி:- தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த மாதம் நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டதைத் தொடர்ந்து இந்த மாத இறுதியில் “பாக்ஸ்கான்” தொழிற்சாலை மூடப்போவதாகச் செய்தி வந்துள்ளதே? தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறதா?
கலைஞர்:- தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த மாதம் நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டதைத் தொடர்ந்து இந்த மாத இறுதியில் “பாக்ஸ்கான்” தொழிற்சாலை மூடப்போவதாகச் செய்தி வந்துள்ளது. கடந்த மாதம் நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டபோதே இந்த ஆட்சியினரை இந்தத் தொழிற்சாலை பற்றி எச்சரித்தேன். ஆனால் அவர்கள்தான் கேளாக்காதினராய் இருக்கிறார்களே?

திருப்பெரும்புதூரில் செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்படுமென தொழிற்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் எட்டாயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தார்கள். நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டதைத் தொடர்ந்து ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சித் தொழிலாளர்கள் 6,400 பேருக்கு ஏற்கனவே வேலை போய்விட்டது.

தற்போது 1,200 தொழிலாளர்கள் மட்டுமே பணி புரிந்து வருகிறார்கள். இந்தத் தொழிற்சாலைகளை தொடர்ந்து நடத்துவதற்காக அமைச்சர்கள் யாரும் பேச்சுவார்த்தை யில் கலந்து கொள்ளாமல், அதிகாரிகளை மட்டுமே அனுப்பி வைத்ததாகவும், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதால், பாக்ஸ்கான் நிறுவனம் அந்தப் பேச்சுவார்த்தைக்கே வராமல், தொழிற்சாலையை மூடி விட்டதாகவும் செய்தி வெளிவந்துள்ளது. இந்த நடவடிக்கையால் 1,200 தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

தொழிற்சாலையின் நிர்வாகத்தினர், 22ஆம் தேதி முதல் தொழிலாளர்கள் பணிக்கு வர வேண்டாம், விடுமுறையுடன்கூடிய ஊதியம் அளிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். இப்படி எத்தனை நாள்களுக்கு விடுமுறையுடன் கூடிய ஊதியம் தருவார்கள் என்றும் உறுதியாகக் கூறவில்லை. எனவே தொழிற் சங்கங்கள் இந்த முடிவை ஏற்கவில்லை.

தொழிலாளர் நலத் துறை சார்பில் நீண்ட நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க, தொழிற் சங்கச் சட்டத்தில் விதிகள் இல்லை என்றும், பேச்சு வார்த்தை முடிவுக்கு வரும் வரை ஆலை வழக்கம் போல் இயங்க வேண்டுமென்றும் கூறப்படுகிறது. தொழிற்சாலை நிர்வாகம் இதைக் கேட்கத் தயாராக இல்லை.

இதற்கிடையே தொழிலாளர்கள் ஆலைக்குள் நுழையும் போராட்டம் நடத்த முயற்சித்திருக்கிறார்கள். தோழர் அ. சவுந்தரராசன் தலைமையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் தொழிலாளர்கள் “பாக்ஸ்கான்” தொழிற்சாலையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி, காவல் துறையினர் தொழிலாளர்களை கைது செய்திருக்கிறார்கள்.

தொழிலாளர்கள் வேலை இழந்தால் நமக்கென்ன கவலை என்று அமைச்சர்கள் “அம்மா”வுக்காக யாகம் வளர்க்கவும், ஏடுகளில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்யவும், காவடி தூக்கவும், பஜனை பாடவும் சென்று விடுகின்ற செய்திகள்தான் ஏடுகளில் வருகின்றன.
அ.தி.மு.க. ஆட்சியில் புதிதாக தொழிற்சாலைகளை அமைக்க உதவுகிறார்களோ இல்லையோ, கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல தொழிற்சாலைகளுக் குத் தொடர்ந்து மூடுவிழா நடத்துவதைத் தடுப்பதற்கான முயற்சியிலும் ஈடுபடவில்லை என்பதுதான் தொழிலாளர்கள் புரிந்து கொள்ளும் உண்மையாக உள்ளது.

கேள்வி:- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிடிவாதம் காரணமாக சட்டமன்ற அலுவல்களும், தலைமைச் செயலகப் பணிகளும் கோட்டையிலே உள்ள பழைய தலைமைச் செயலகத்திலே இயங்கி வருவதால் அங்கே அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன.
அதேநேரத்தில் கழக அரசு காலத்தில் நீங்கள் பெரு முயற்சி எடுத்துக் கட்டிய கட்டிடத்தில் “சூப்பர் ஸ்பெஷாலிட்டி” மருத்துவமனை தொடங்கினார்களே, அது எப்படி இயங்குகிறது?

கலைஞர்:- அந்தக் கட்டிடம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி மலையாள மொழியில் வெளிவரும் பிரபல நாளேடான “மாத்ருபூமி” 15-12-2014 அன்று இரண்டாம் பக்கத்தில் புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் தலைப்பே, “சூப்பர் சிறப்பு வசதி ஆஸ்பத்திரி - கொசு வளர்க்கும் பிரதான இடம் ஆகிறது” என்பதுதான்!

அந்தச் செய்தியில், “தலைநகர் சென்னையில் உள்ள இந்தக் கட்டிடத்தின் வாலாஜா சாலையைப் பார்த்தபடி உள்ள நுழைவு வாயிலின் முதல் மாடியின் தரை கவனிக்கப்படாத காரணத்தால், தரை உடைந்து, புல் பூண்டுகள் முளைத்து சிதிலமடைந்து சின்னாபின்ன மாகக் காணப்படுகிறது. “டைல்ஸ்” ஓடுகள் பதிக்கப்பட்டுள்ள தொட்டியில் அழுகிப் போன பொருள்களின் துர்நாற்றம் வீசுகிறது.
அண்ணா சாலையில் உள்ள நுழைவு வாயிலை மட்டும் பராமரிப்பு செய்வதால் வாலாஜா நுழைவு வாசல்ன் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. மீன் அலங்காரத் தொட்டிகளின் முன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலி துருப்பிடித்துச் சிதிலமடைந்துள்ளது. ஆள் நடமாட்டமே இல்லாததால் ஆலமரச் செடிகள் வளர்ந்து விட்டன.

சென்னையில் மழை அதிகமாக பெய்ததால், மீன் தொட்டிகள் நீரால் நிரம்பி புழுக்கள் வாசம் செய்யும் இடமாக மாறி விட்டது. கொசு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி கோடிக்கணக்கில் ரூபாய் செலவழிக்கும் போது, இந்த இடம் கொசுவின் கேந்திர மாக இருப்பது வியப்பைத் தருகிறது” என்றெல்லாம் அந்த இதழ் வர்ணித்துக் கொண்டே போகிறது.

அழகாகக் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் புழங்குவாரற்றுச் சிதிலமடைந்து காலி இடங்கள் அதிகமாக இருக்கின்ற நிலையில், ஜெயலலிதாவின் பிடிவாதம் காரணமாக கோட்டையிலே அதிகாரிகளும், அலுவலர்களும் இட நெருக்கடியில் சிக்கி வராந்தாக்களில் அமர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி:- அ.தி.மு.க. அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறதே?
கலைஞர்:- அபராதம் விதித்து தீர்ப்பளிப்பதைப் பற்றி யார் அவமானப்படுகிறார்கள். முதல் அமைச்சராக இருந்த “அம்மா”வுக்கே பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நான்காண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தே தீர்ப்பளித்த பிறகும், அவருடைய படங்களை அரசு அலுவலகங்களிலிருந்து கழற்றியா விட்டார்கள்

வழக்கறிஞர்கள் பாடம் நாராயணன், லிங்கேஸ்வரன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த ஆண்டு 15 காவல் நிலைய மரணங்களும், இந்த ஆண்டு இதுவரை 9 பேரும் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட வாலிபர் ஒருவரை சப் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அத்துடன், சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளரே திருட்டு வழக்கு தொடர்பாக சிறுவனை தொண்டையில் துப்பாக்கியால் சுட்டது, வழக்கறிஞர்களே தாக்கப்படுவது போன்ற சம்பவங் 3 களைத் தடுக்க, காவல் நிலையங்களில் கண்காணிப்புக்  கமெரா பொருத்த உத்தரவிடவேண்டுமென்று கோரி இருந்தார்கள்.

இதனை விசாரித்த உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு, அது பற்றி 16-12-2014க்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் தமிழக அரசு பதில் மனுவினை அவ்வாறு தாக்கல் செய்யவில்லை. 16ஆம் திகதியன்று வழக்குவிசாரணைக்கு வந்தபோது, பதில் மனுவினை குறிப்பட்ட திகதிக்குள் தமிழக அரசு தாக்கல் செய்யாததற்காக, பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

இந்த அளவுக்கு அரசுக்கு அவமானம் ஏற்படுத்து கின்ற வகையில், நீதிமன்றத்தின் கேள்விக்குப் தில் அளிக்காததற்கு யார் பொறுப்பு? அதிகாரிகளின் தவறா? அமைச்சர்களின் தவறா? என்பதை நாட்டு மக்களுக்குத் தெளிவாக்கிட வேண்டும்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top