↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பாலசந்தரின் இயக்கத்தில் நடித்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. பாலசந்தரின் மரணத்தை முன்னிட்டு நீண்ட அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
 
பழம்பெரும் திரைப்பட இயக்குனரும், ரசிகர் பெருமக்களால் இயக்குனர் சிகரம் எனவும் அன்புடன் அழைக்கப்பட்ட கே.பாலசந்தர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தனது 84-வது அகவையில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து ஆற்றொனாத்துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
 
அன்பும்இ அடக்கமும், எளிமையும் மிகுந்த கே.பாலசந்தர் கலையுலக வாழ்வு, திண்ணை நாடகங்கள் மூலம் தான் அரங்கேறியது. மத்திய அரசு அலுவலகத்தில் பணி புரிந்துகொண்டே அவர் நடத்திய ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘எதிர்நீச்சல்’, ‘நாணல்’, ‘விநோத ஒப்பந்தம்’ போன்றவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற பிரபல நாடகங்கள்.
 
கே.பாலசந்தர் ‘நீர்குமிழி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பல வெற்றி படங்களை இயக்கினார். கே.பாலசந்தர் திரைப்படங்கள் பெண்களை மையமாக வைத்து சமூகத்தில் அவர்கள் படும் துன்பங்களையும், துயரங்களையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கும். தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி இந்திஇ தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகிலும் தடம் பதித்து வெற்றி கொடியை நாட்டியவர்.
 
கே.பாலசந்தர் இயக்குனராக மட்டுமின்றி கதை, திரைக்கதை, வசனம் போன்ற துறைகளிலும் மிளிர்ந்தவர். அவர் தான் இயக்கிய திரைப்படங்களில் உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் புது வர்ணம் பூசி திரையுலகிற்கு புது இலக்கணம் வகுத்து தந்தவர். தொலைக் காட்சிகளில் வெளியாகும் இக்கால நெடுந்தொடர்களுக்கு இவர்தான் வித்திட்டவர்.
 
கே.பாலசந்தர் எண்ணற்ற தேசிய மற்றும் மாநில விருதுகளைப்பெற்று திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்திய சினிமாவிற்கு அவர் அளித்த ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
 
கே.பாலசந்தர் மறைவு திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரையுலகில் அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. கே.பாலசந்தரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
 
- இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top