↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அசோக் டைரக்ஷனில் 'பாக்மதி' தெலுங்கு படத்தில் நடிக்கிறார் அஞ்சலி.  தற்போது படக் குழு அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கிறது. இதற்காக அஞ்சலியும் ஜெயம் ரவி பட ஷெட்யூலை முடித்துக் கொண்டு அமெரிக்கா பறந்துவிட்டார். அஞ்சலியை பின்தொடர்ந்து அவரது ரகசிய காதலனும் அமெரிக்கா சென்றுவிட்டாராம். 

ஷூட்டிங் இடைவெளியில் காதலனுடன் அரட்டை, ஷூட்டிங் முடிந்ததும் ஷாப்பிங் என செம லவ் மூடில் அமெரிக்காவில் சந்தோஷமாக இருக்கிறாராம் அஞ்சலி. ரகசிய காதலனை யாரும் மொபைலில் கூட போட்டோ எடுக்காதபடி பார்த்துக் கொள்கிறாராம். இந்த பட ஷூட்டிங் ஒரு மாதம் அமெரிக்காவிலேயே நடக்கும் என கூறப்படுகிறது. 

அதனால் காதலனுடன் புத்தாண்டையும் நியூயார்க் நகரிலேயே கொண்டாட அஞ்சலி முடிவு செய்துள்ளார். அடுத்த ஆண்டு இறுதியில் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அவர் காதலனை கரம்பிடிப்பார் என கூறப்படுகிறது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top