↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இந்து கடவுளை இழிவாக சித்தரித்திருப்பதாக சில கோலிவுட் படங்கள் மீது இந்து அமைப்பினர் புகார் கூறி போராட்டம் நடத்தி இருக்கின்றனர். தற்போது இந்த எதிர்ப்பு பாலிவுட்டில் தலைகாட்டி இருக்கிறது. ஆமிர்கான், அனுஷ்கா சர்மா நடித்துள்ள படம் 'பி கே'. இப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது. 

படத்தில் இந்து கடவுள் சிவபெருமானைப் பற்றி வரும் வசனங்கள் இந்து மதத்தினரை புண்படுத்தும்படி உள்ளது என்று மும்பை இந்து அமைப்பு சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத மோதல்களை தடுக்கும் வகையில் ஆமிர்கான், இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா ஆகியோர் மீது 153ஏ, 295 ஏ ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top