↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இந்த வாரமும் தொடர்கிறது ரிலீஸ் மழை - Cineulagam
கடந்த வாரம் 11 படங்கள் வெளிவந்ததை போல் இந்த வாரமும் 11 படங்கள் வெளிவர இருக்கிறது.
சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் 3 மாதத்திற்கு எந்த படங்களையும் வெளியிடாமல் தொழில் முடக்கம் செய்யலாம் என்கிற நிலையில் இருப்பதால் சிறு பட்ஜெட் படங்களும் தற்போது வெளியாகி வருகின்றன.
இதன் காரணமாக தான் இத்தனை படங்கள் வெளியாவதற்கு காரணம் என்று கூறுகின்றனர். வருகிற 13ம் தேதி வெள்ளிக்கிழமை கதம் கதம், ராஜதந்திரம், இவனுக்கு தண்ணில கண்டம், சொன்னாப் போச்சு, இரவும் பகலும் வரும், தவறான பாதை, வானவில் வாழ்க்கை, ஐவராட்டம், மகாபலிபுரம் என மொத்தம் 9 தமிழ் படங்கள் வெளிவருகிறது.
அதோடு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள சங்கராபரணம் படமும், பிளாக் அண்ட் ஒயிட் என்ற ஆங்கில படமும் வெளிவருகிறது.
தற்போது ஒரே நாளில் இத்தனை படங்கள் வெளியாவதால் தியேட்டர் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top