நடிகர்கள் சினிமாவில் ஒரு நிலைக்கு வந்துவிட்டால் போதும், உடனே தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி விடுகின்றனர்.
இப்போதெல்லாம் நிறைய தயாரிப்பு நிறுவனங்கள் உருவாவதை நாம் பார்த்து வருகிறோம். தற்போது இந்த லிஸ்டில் காமெடியன் அலியும் இணைந்துள்ளார்.
அந்த வகையில் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி காமெடியனாக திகழ்ந்து வந்தாலும், தற்போது சினிமா நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வந்து பார்வையாளர்களை சிரிக்க வைத்து வருகிறார் அலி.
டோலிவுட்டின் பவர் ஸ்டாரான பவன் கல்யாணும், நடிகர் அலியும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. தற்போது அலியின் முதல் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தில் பவன் கல்யாண் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
அதோடு பவன் கல்யாண் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தில் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நாயகனாக நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment