↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மும்பையில் இருந்து கோலிவுட்டுக்கு வந்து கோலோச்சி வரும் நடிகைகளில் தமன்னா, ஹன்சிகா குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக இந்தியில் நடித்தவருக்கு கதாநாயகி வேடம் அங்கே கிடைக்கவில்லை. ஆனால் தமிழ், தெலுங்கில் கதாநாயகி வேடங்கள் கிடைத்ததை அடுத்து இங்கேயே செட்டிலாகி விட்டார்.

ஆனால், தமன்னா தென்னிந்திய சினிமாவில் ஒரு முக்கிய கதாநாயகியாக வலம்வந்தபோதிலும், தாய்மொழியான இந்தியில் முன்னணி நடிகையாகியே தீருவது என்று வெறியில் இருந்து வந்தார். அதனால்தான் ஹிம்மத்வாலா படத்தில் சான்ஸ் கிடைத்தபோது இந்தி சினிமா தனக்கு கதவு திறந்து விட்டது என்று உற்சாகத்தில் தமிழ், தெலுங்கு படஙக்ளை ஓரங்கட்டி விட்டு பாலிவுட்டுக்கு ஓடினார்.

ஆனால், அவர் நடித்த ஹிம்மத்வாலா மட்டுமின்றி ஹம்சகல்ஸ், எண்டர்டெய்ன்மென்ட் ஆகிய இந்தி படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்ததால், இப்போது தமன்னா சான்ஸ் கேட்டு செல்லும் இடங்களில் அவரது தோல்வி ராசியை சொல்லியே திருப்பி அனுப்புகிறார்களாம். அதனால், இனிமேல் இந்தி சினிமா பக்கமே செல்லப்போவதில்லை என்று கூறி வரும் தமன்னா, தமிழ், தெலுங்கில் மீண்டும் அழுத்தமாக கால்பதிக்கத் தொடங்கியிருக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top