↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஓட்டல் தொடங்க  நமீதா முடிவு
கோலிவுட்டில் என்ட¢ரி ஆன காலகட்டத்தில் நமீதாவின் கை ஓங்கியது. வேகமாக படங்களை கைவசப்படுத்தி வந்த அவருக்கு கடந்த சில வருடங்களாகவே வாய்ப்புகள் வராமல் தடையாகி இருக்கிறது. பருமனாக இருப்பதால்தான் அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என பேச்சு உள்ளது. உடல் எடையை குறைக்க கடுமையான பயிற்சி மேற்கொண்டும் போதிய பலன் கிடைக்காததால் வருத்தத்தில் ஆழ்ந்தார். இதற்கிடையில் அரசியல் குதிக்க தயார் என அறிவித்திருக்கிறார். ஆனால் அரசியல் பிரவேசம் செய்வது எப்போது என்று முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கிறார்.

இதற்கிடையில் வர்த்தகத்தில் தனது கவனத்தை திருப்பி இருப்பதுடன் வேறு துறையில் முதலீடுகளும் செய்திருக்கிறார். அடுத்து ஓட்டல் பிசினசில் ஈடுபட முடிவு செய்திருக்கிறார். ஒரு இடத்தில் மட்டும் இதை நிறுத்திக்கொள்ளாமல் பல்வேறு இடங்களில் கிளைகள் அமைத்து ஓட்டல் நடத்த எண்ணி உள்ளாராம். தனது வருங்கால கணவரும் இதே ஆர்வத்துடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் நினைக்கிறாராம். சீக்கிரமே நமீதாவுக்கு கெட்டி மேளம் கொட்டுகிறதோ இல்லையோ கல்யாண விழாக்களுக்கு சமையல் ஆர்டர் பிடிக்க ஆரம்பித்து விடுவார் என்று அவரது நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top