↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கார்ப்பரேட் முகத்திரையை கிழிக்கும் படமா உறுமீன்? - Cineulagam
பல ஹிட் படங்களுக்கு எடிட்டராக இருந்த சக்திவேல் பெருமாள் இயக்குனர் அவதாரம் எடுக்கும் படம் உறுமீன். பாபி சிம்ஹா நாயகனாகவும், ரேஷ்மி மேனன் நாயகியாகவும் நடிக்க மெட்ராஸ் கலையரசன் வில்லன் கேரக்டரில் நடிக்கிறார்.
இப்படம் பற்றி இயக்குனர் கூறுகையில், உறுமீன் என்றால் பெரிய மீன் என்பது பொருள். ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு என்பதற்கு ஏற்ப செயல்படுவதுதான் இன்றைய கார்ப்பரேட் கம்பெனிகள்.
கார்ப்பரேட் கம்பெனிகளின் முகத்திரையை கிழிப்பது தான் உறுமீன் கதை. இதற்காக நிறைய நாள் மெனக்கெடுத்து பல தகவல்களை திரட்டி திரைக்கதை அமைத்திருக்கிறோம்.
இப்படத்தில் ஆக்ஷன் த்ரில்லர் கதையில் அழுத்தமான காதலும் ஆழமான கருத்தும் இருக்கிறது என்று கூறுகிறார் இயக்குனர் சக்திவேல்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top