↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிப்பில் வெளிவந்த 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா ரீ எண்ட்ரி ஆகி நடித்து முடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது ஜோதிகாவின் தயாரிப்பில் மஞ்சுவாரியர் ஒரு படம் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஜோதிகாவின் கணவர் சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்க இருக்கும் ஒரு படத்தை பசங்க இயக்குனர் 'பாண்டிராஜ்' இயக்கவுள்ளார். இந்த படத்தில்தான் மஞ்சுவாரியர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பாண்டிராஜ் தற்போது 'இது நம்ம ஆளு' படத்தின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், இந்த படத்தை முடித்தவுடன் அவர் மஞ்சுவாரியர் படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது

கடந்த பல வருடங்களாக மலையாள திரையுலகில் நடித்து வரும் மஞ்சுவாரியருக்கு தமிழில் இந்த படம்தான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top