↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தந்தை சிரஞ்சீவி அரசியலில் நுழைந்ததுபோல் அவரது மகன் ராம் சரண் தேஜாவுக்கும் அரசியலில் நுழையும் எண்ணம் உதித்திருப்பதாக கூறப்படுகிறது. சிரஞ்சீவி நடிப்பில் பிஸியாக இருந்தபோது வாரம் தவறாமல் தனது ரசிகர்களை சந்தித்து வந்தார். இதையடுத்து அவர் தனி அரசியல் கட்சி தொடங்கி பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சமீபகாலமாக அவரை சந்திக்கும் நடிகர்களும், ரசிகர்களும் மீண்டும் நடிக்கவரும்படி அழைக்கின்றனர். இதையடுத்து தனது 150வது படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். அதற்கான ஸ்கிரிப்ட் தேடி வருகிறார்.
இந்நிலையில் சிரஞ்சீவி பாணியில் ராம் சரணும் ரசிகர்களை நேரில் சந்திக்க முடிவு செய்திருக்கிறார். 2 வாரத்துக்கு ஒருமுறை அவர் ரசிகர்களை சந்திக்க உள்ளார். தன்னுடன் அல்லு அர்ஜுனையும் இந்த சந்திப்பில் இணைத்துக்கொள்ள எண்ணி உள்ளார். சில சமயம் சிரஞ்சீவியும் இந்த சந்திப்பின்போது பங்கேற்கப்பதாக கூறி இருக்கிறார். ராம் சரணின் இந்த திடீர் முடிவு அவரும் சிரஞ்சீவி வழியில் அரசியலுக்கு செல்ல இருக்கிறார். அதற்கான பாதையை இப்போதிலிருந்தே அமைக்க தொடங்கி இருப்பதாக தெரிகிறது என டோலிவுட்டில் பேசப்படுகிறது.
0 comments:
Post a Comment