↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராத் கோஹ்லி சிறப்பாக விளையாடி சதம் அடிக்கும்பட்சத்தில், கேலரியில் இருக்கும் தனது தோழியை நோக்கி அவர் முத்தத்தை பறக்கவிடுவதை பொருட்படுத்த தேவையில்லை என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். உலக கோப்பை தொடர் நெருங்கிவிட்ட நிலையில், நடப்பு சாம்பியனான இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து கபில் தேவ் நேற்று கூறியதாவது: 2011 உலக கோப்பையில் விளையாடிய வீரர்களில் பலர் இன்றைய அணியில் இல்லை. உலக கோப்பை அனுபவம் இல்லாவிட்டாலும், இறுதி வரை போராடக் கூடிய துணிச்சலான வீரர்கள் உள்ளனர். இந்திய அணி நிச்சயமாக அரை இறுதிக்கு முன்னேறும்.
அரை இறுதியில் விளையாடும் நான்கு அணிகளுக்குமே தலா 25 சதவீத வாய்ப்பு உள்ளது. எனவே கோப்பை யாருக்கு என்பதை கணிப்பது கடினம்.
போட்டிகளின்போது விராத் கோஹ்லி தனது தோழிக்கு முத்தத்தை பறக்கவிடுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் சிறப்பாக விளையாடி சதம் விளாசும்போது அப்படி நடந்துகொள்வதை பொருட்படுத்த தேவையில்லை. டக் அவுட் ஆகிவிட்டு பிளையிங் கிஸ் கொடுத்தால் தான் தவறு. இன்றைய கிரிக்கெட் வெகுவாக மாறிவிட்டது. இவ்வாறு கபில் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment