இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரக ருமேஷ் ரத்னாயக்க நியமனம்
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சங்கக்காராவின் குற்றச்சாட்டு
இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் மறைமுகமாக செயற்பட்டதாக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரா குற்றம் சுமத்தியுள்ளார்.

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆண்டி முர்ரே
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரே இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

131 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
மேற்கிந்திய தீவுகள்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 5வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 131 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் தென்ஆப்பிரிக்கா 5 போட்டிக்கொண்ட தொடரை 4–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஐபிஎல் வீரர்கள் ஏலம்
8வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (பெப்ரவரி) 16ம் திகதி பெங்களுரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொனால்டோவுக்கு தடை
லா லிகா கால்பந்து போட்டியில் எதிரணி வீரருடன் மோதலில் ஈடுபட்ட ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோட்டைவிட்ட இந்தியா
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்தியா துடுப்பாட்டத்தில் சொதப்பி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.