↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

முனி, முனி 2 காஞ்சனா ஆகிய இரண்டு படங்களின் வெற்றியை தொடரந்து அதன் அடுத்த பாகமான முனி 3 கங்கா' என்ற படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பெயரை ராகவா லாரன்ஸ் மாற்றியுள்ளதாக செய்திகள் வெளியுள்ளது.

இந்த படத்தின் புதிய பெயர் 'காஞ்சனா 2' என்று வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. ஏப்ரல் 2ஆம் தேதி கமல்ஹாசனின் உத்தமவில்லன் மற்றும் உதயநிதியின் 'நண்பேண்டா' ஆகிய திரைப்படங்கள் வெளிவரும் நிலையில் ஒருவார இடைவெளியில் காஞ்சனா 2' வெளியாகிறது.

'காஞ்சனா 2' படத்தில் ராகவா லாரன்ஸ், டாப்சி, கோவை சரளா, தேவதர்ஷினி, மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் 'ஓகே கண்மணி' நாயகி நித்யா மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

லியான் ஜேம்ஸ்' என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் நீண்டநாட்கள் பணிபுரிந்த நியோல் ஜேம்ஸ் என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ராஜவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top