இதுகுறித்து அவர் கூறும்போது,
‘‘நல்ல நிலைமையில் இருக்கும்போதே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். அதன்பிறகு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்துவேன்.
சரியான நேரத்தில் இந்த முடிவை எடுக்கக்கூடிய தைரியம் எனக்கு உண்டானதை எண்ணி நான் மிகழ்சி அடைகிறேன். ஏனென்றால், கடந்த காலங்களில் என்னை விட பெரிய வீரர்களெல்லாம் சரியான நேரத்தில் இதைபோன்ற முடிவை எடுக்க முடியாமல் திணறி உள்ளனர்.
அடுத்த 20 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதில் பாகிஸ்தான் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை.
உலகக்கிண்ணப் போட்டிக்கு பிறகு ஏராளமான 20 ஓவர் போட்டியில் விளையாடுவேன். 2016ம் ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலகக்கிண்ண போட்டிக்கு வலுமையான பாகிஸ்தான் அணியை உருவாக்க முயற்சி செய்வேன்.
முறையாக ஓய்வு திகதி அறிவித்து செல்லும் முதல் பாகிஸ்தான் வீரரான நானாகத்தான் இருப்பேன். இதுவே எனக்கு போதும். ஒருநாள் போட்டியில் நான் அதிகளவில் சாதித்து விட்டேன்’’ என்றார்.
34 வயதாகும் அப்ரிடி 389 போட்டிகளில் வியைாடி 7870 ஓட்டங்கள் அடித்ததுடன் 391 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.
ஒருநாள் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்து சாதனை படைத்தவர் அப்ரிடி. இவரது சாதனையை 17 வருடங்கள் கழித்து நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.