↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், சச்சினுக்கு கொடுத்த மரியாதை அனைவரையும் வியக்க வைத்துள்ளதுடன் அவரின் மதிப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்தை வீழ்த்தி 5வது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது.
இறுதிப் போட்டி முடிந்த பின்னர் அவுஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் ஊடகத்திற்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயம் உலகக்கிண்ண தூதுவராக உள்ள நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள மைதானத்திற்குள் வந்துகொண்டிருந்தார்.
அவரை பார்த்த மேக்ஸ்வெல், பேட்டியின் இடையில் ஓடோடி வந்து சச்சினை கட்டியணைத்து ஆரத்தழுவி நலம் விசாரித்த பின்னர் மீண்டும் சென்று தனது பேட்டியை தொடர்ந்துள்ளார்.
மேக்ஸ்வெல், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுத்த மரியாதையை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top