↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கெத்தை மாற்றத் போகும் உதயநிதி - Cineulagam
கடந்த வியாழக்கிழமை உதயநிதி நடித்த நண்பேன்டா படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு உதயநிதி திருக்குமரன் இயக்கத்தில் கெத்து என்ற படத்தில் நடித்து வருகிறார்.
எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டது, அதோடு அண்மையில் படத்திற்கான பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் கெத்து என்ற பெயரை வேறொருவர் பதிவு செய்து வைத்திருந்ததால், படத்திற்கு வேறு பெயர் வைக்கப் போவதாக உதயநிதி கூறியுள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் கருணாகரன் காமெடியனாக நடிக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top