அண்மை காலமாக தமிழ் படங்களில் அதுவும் பெரிய நடிகர்களின் படங்களில் வரும் வில்லன்கள் அழகாகவும், கும்மென்ற ஜிம் பாடியுடனும் உள்ளனர். வில்லன்கள் என்றால் முகத்தில் வடுவோடு பார்க்கவே கொடூரமாக இருக்க வேண்டும் என்ற காலம் மலை ஏறிவிட்டது. பாலிவுட்டில் வரும் வில்லன்கள் எல்லாம் ஹீரோக்களுக்கு இணையாக அழகாகவும், ஜிம் பாடியுடனும் உள்ளனர். தற்போது பாலிவுட் பாணி மெது மெதுவாக தமிழ் திரை உலகிற்கும் வரத் துவங்கியுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் சூர்யாவை வைத்து இயக்கிய ஏழாம் அறிவு படத்தில் அமெரிக்க நடிகர் ஜானி டாங் லீயாக நடித்தார். கும்மென்ற ஜிம் பாடியுடன் வசீகரமாக இருந்த அவர் பலரின் மனங்களை கவர்ந்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ராணுவ வீரராக நடித்த துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல் தலைவராக நடித்தவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வல். அவரும் பார்க்க அம்சமாகவும், கும்மென்றும் இருந்தார். தற்போது உடல்வாகிலும், அழகிலும் ஹீரோக்களுக்கு இணையாக வந்துவிட்டனர் வில்லன்கள்.
விஜய் நடித்த கத்தி படத்தில் அழகான வில்லனாக வந்து மக்களை மிரட்டியவர் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ். அவர் பாலிவுட்டிலும் அழகிய வில்லனாக வலம் வருகிறார்.

சிறுத்தை சிவா அஜீத்தை வைத்து இயக்கும் 'தல 56' படத்தில் தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து வரும் கபீர் துஹான் சிங் வில்லனாக நடிக்கிறார். மாடலாக இருந்த கபீர் தற்போது படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

0 comments:
Post a Comment