↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நடிகர் விஜய் சசிகுமார் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அநேகமாக 60வது படமாக அமையலாம் என்றும் கூறப்படுகிறது. நடிகர் விஜய் தற்போது சிம்புத்தேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 58வது படமாகும். அடுத்ததாக அட்லி இயக்கத்தில் 59 படத்தில் நடிக்க இருக்கிறார். இதனிடையே விஜய் நடிக்கும் 60 வது படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகரும் இயக்குநருமான சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படம் 2008ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மாஸ் படமாகவும் பேசப்பட்டது. தேசிய விருதுகளையும் பெற்றது. அதேபோல ஒரு மாஸ் கதையை விஜய்க்காக ரெடி செய்து வைத்துள்ளாராம் சசிகுமார்.

சசிகுமார் கூறியுள்ள கதை விஜய்க்கு பிடித்துப் போகவே தற்போது கைவசம் உள்ள இரண்டு படங்களை முடித்துவிட்டு நடிப்பதாக கூறியுள்ளாராம்.

புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகாவும், ஸ்ருதிஹாசனும் நடித்து வருகின்றனர். அட்லி இயக்கத்தில் நடிக்கும் விஜய்க்கு சமந்தாவும் எமி ஜாக்சனும் நடிக்கின்றனர்.

சசி இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால் இந்தப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் மாஸ் கிளாஸ் ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top