↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஆர்யா பூஜா நடித்த ஓரம்போ, மிர்ச்சி சிவா நடித்த வ குவார்ட்டர் கட்டிங் ஆகிய படங்களை இயக்கியவர்கள் புஷ்கர் - காயத்ரி. இரட்டை இயக்குநர்களான இவர்கள் இருவரும் கணவன் மனைவி. வ குவார்ட்டர் கட்டிங் படம் தோல்வியடைந்ததினால் அடுத்தப் படம் இயக்குவது அநியாத்துக்கு தாமதமாகிப்போனது இவர்களுக்கு. இரண்டு வருடங்களுக்கு முன் புஷ்கர் - காயத்ரி இரவரும் விஜய்சேதுபதியிடம் கதை சொன்னார்கள். கதை பிடித்துப்போனதால் அந்தப் படத்தில் நடிப்பதாக உறுதியளித்த விஜய்சேதுபதியால் உடனடியாக கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு கால்ஷீட் தருவதாக சொன்னார். அதை நம்பி வருடக்கணக்கில் காத்திருந்தனர் புஷ்கர்- காயத்ரி. தற்போது ஜூன் மாதம் முதல் கால்ஷீட் தருவதாக சொல்லி இருக்கிறாராம் விஜய்சேதுபதி. அதனடிப்படையில் தற்போது ப்ரீ புரடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. விக்ரம் - வேதா என தலைப்பு வைப்பட்டுள்ளது. இது கேங்ஸ்டர் சம்மந்தப்பட்ட படமாம்.

எந்த அயல்நாட்டுப்படம்னு தெரியலையே...!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top