↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சுனில் நரைன் மீதான தடையை நீக்காவிட்டால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவோம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
கடந்த சம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் போது மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் பந்துவீச்சு சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது எனக் கூறி பி.சி.சி.ஐ அவருக்கு தடை விதித்தது.
இந்நிலையில் சுனில் நரைனின் பந்துவீச்சு இங்கிலாந்தில் உள்ள லாங்பாரோவில் உள்ள சிறப்பு பயிற்சி மையத்தில் ஐ.சி.சி. சார்பாக ஆராயப்பட்டது.
அதனடிப்படையில் சுனில் நரைனின் பந்துவீச்சில் எந்த குறைபாடும் இல்லை எனக் கூறி சுனில் நரைனுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஐ.சி.சி. சமீபத்தில் நீக்கியது. ஆனால் இதனை ஏற்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து வருகின்ற 7ம் திகதி தொடங்கவுள்ள ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சுனில் நரைன் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுனில் நரைன் கொல்கத்தா அணிக்கு முக்கிய வீரராக இருப்பதால் அவர் மீதான தடையை பிசிசிஐ நீக்காவிட்டால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவோம் என்று அந்த அணியின் உரிமையாளராக உள்ள நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே. சுனில் நரைனை சென்னையில் ஒரு சோதனைக்கு உட்படுத்த பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. அதில் அவரது நிலையை பார்த்து விட்டு ஐபிஎல் 8 தொடரில் பங்கேற்கத் தடை இல்லை என்று பிசிசிஐ தெரிவிக்கவுள்ளது.
ஆனால் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஷாருக்கான், நரைனை சோதனைக்குக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அவர் கூறி வருகிறார். இந்த விவகாரத்தால் ஐபிஎல் தொடங்கும் முன்பே சர்ச்சை வெடித்துள்ளது.
கடந்த சம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் போது மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் பந்துவீச்சு சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது எனக் கூறி அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சுனில் நரைனின் பந்துவீச்சு இங்கிலாந்தில் உள்ள லாங்பாரோவில் உள்ள சிறப்பு பயிற்சி மையத்தில் ஐ.சி.சி. சார்பாக ஆராயப்பட்டது.
அதனடிப்படையில் சுனில் நரைனின் பந்துவீச்சில் எந்த குறைபாடும் இல்லை எனக் கூறி சுனில் நரைனுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஐ.சி.சி. சமீபத்தில் நீக்கியது. ஆனால் இதனை ஏற்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து வருகின்ற 7ம் திகதி தொடங்கவுள்ள ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சுனில் நரைன் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுனில் நரைன் கொல்கத்தா அணிக்கு முக்கிய வீரராக இருப்பதால் அவர் மீதான தடையை பிசிசிஐ நீக்காவிட்டால் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவோம் என்று அந்த அணியின் உரிமையாளராக உள்ள நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே. சுனில் நரைனை சென்னையில் ஒரு சோதனைக்கு உட்படுத்த பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. அதில் அவரது நிலையை பார்த்து விட்டு ஐபிஎல் 8 தொடரில் பங்கேற்கத் தடை இல்லை என்று பிசிசிஐ தெரிவிக்கவுள்ளது.
ஆனால் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஷாருக்கான், நரைனை சோதனைக்குக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அவர் கூறி வருகிறார். இந்த விவகாரத்தால் ஐபிஎல் தொடங்கும் முன்பே சர்ச்சை வெடித்துள்ளது.

0 comments:

Post a Comment

Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top