↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் படம் ‘மாங்கா’. அவரே இசை அமைத்துள்ளார். ஜோடியாக லீமா, அத்வைதா நடிக்கிறார்கள். ஆர்.எஸ்.ராஜா இயக்குகிறார். இதன் பாடல்களை  யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார். விழாவில் கங்கை அமரன் பேசியதாவது:

இங்கு பேசியவர்கள் பிரேம்ஜிக்கும், வெங்கட்பிரபுக்கும் இடையே உள்ள அண்ணன், தம்பி உறவைப் புகழ்ந்து பேசினார்கள். அவர்கள் சிறுவயதில் இருந்தே அப்படித்தான். நான் நிறைய படங்களுக்கு இசை அமைத்தேன், பாடல்கள் எழுதினேன், பாடினேன். ஒரு கட்டத்தில் என் அண்ணன் இளையராஜா எனக்கு வாய்ப்பு தருவதை நிறுத்தி விட்டார். நான் பணக் கஷ்டத்துக்கு ஆளானேன். அப்போது பிரேம்ஜியும், வெங்கட்பிரபுவும் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் படிப்பு செலவுக்கு என்னால் பணம் அனுப்ப முடியவில்லை. இதனால் தம்பி பிரேம்ஜி படிக்க, அண்ணன் வெங்கட்பிரபு அங்கு மூட்டை சுமந்தான். அண்ணன், தம்பி உறவு அப்படி இருக்க வேண்டும். என் மகன்கள் இன்று அவரவர்கள் துறையில் வெற்றிபெற்று வருவதைப் பார்த்து தந்தையாகப் பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் கேயார், தொழிலதிபர் எச்.வசந்தகுமார், நடிகர்கள் வைபவ், அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, இளவரசு, வெங்கட்பிரபு, வாசு பாஸ்கர், பவதாரிணி, சினேகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் பி.சி.கே.சக்திவேல் வரவேற்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top