↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


செல்வராகவன் இயக்கிய 'இரண்டாம் உலகம்' படத்தை அடுத்து ஆர்யா-அனுஷ்கா மீண்டும் இணையும் திரைப்படம் 'சைஸ் ஜீரோ'. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தை பிவிபி சினிமா தயாரிக்கின்றது. பிரகாஷ் கோவலாமுடி இயக்கவுள்ள இந்த படத்தில் ஊர்வசி, ஈஷா குப்தா, உள்பட பலர் நடிக்கவுள்ளனர். எம்.எம்.கீரவானி இசையமைக்கவுள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க சோனல் செளஹான் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ள சோனல், இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தாலும் அவருக்கு பவர்புல் கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். அடுத்த வாரம் முதல் சைஸ் ஜீரோ' படக்குழுவினர்களுடன் படப்பிடிப்பில் சோனல் செளஹான் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் இந்த படத்திற்காக அனுஷ்கா தன்னுடைய உடல் எடையை இருபது கிலோ அதிகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு கனிகா திலான் என்பவர் கதை மற்றும் திரைக்கதையை அமைத்துள்ளார். இவர் ஏற்கனவே ஷாருக்கான் நடித்த 'ரா ஒன்' படத்தில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top