↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

vijay, vikranth

நடிகர் விஜய்யின் சித்தி மகனாக விக்ராந்த் கற்க கசடற என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகினார்.

பத்து ஆண்டுகளாக விக்ராந்த் பல படங்களில் நடித்திருந்தாலும் விஷாலின் பாண்டிய நாடு படம் தான் அவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. விக்ராந்த் ‘பிறவி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இடட்ம பெறும் ஒரு பாடலில் விக்ராந்த்துடன் விஷால், ஆர்யா, விஷ்ணு ஆகியோர் நடனமாடியுள்ளனர்.
இந்தப் பாடலில் ஆடுவதற்கு விஜய்யையும் அழைத்திருக்கலாமே என்று கேட்டதற்கு, “விஜய் அண்ணா பிஸியாக இருக்கிறார். அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது. நான் விஜய்யின் சகோதரன் என்பதால் சினிமா உலகிற்குள் எளிதாக நுழைந்துவிட்டேன். அவரது உறவினராக இருப்பதனால்தான் என்னால் பத்து வருடங்களாக இங்கே நீடிக்க முடிந்திருக்கிறது.
விஜய் எனக்கு மிகப்பெரிய வலிமையாகவும் உத்வேகமாகவும் இருக்கிறார். அவர் பெரிய நடிகராக இருந்தபோதும், எப்போதும் அடக்கத்துடனே இருக்கிறார்,” என்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top