உள்ளூர் விளையாட்டுகளில் மேம்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் பாடசாலைகளில் ஒரு தரத்திலான கிரிக்கெட்டிற்கு ஜெயவர்த்தனே உதவுவார் என விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக பாடசாலை சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்க தவறி வருவதால், தற்போது பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள டி20 போட்டிகளுக்கு ஜெயவர்த்தனே சிறந்த பங்களிப்பு வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நாலந்த கல்லூரியில் சிறந்த துடுப்பாட்ட வீரராக திகழ்ந்த ஜெயவர்த்தனே இலங்கை தேசிய அணிக்குள் அணிக்குள் 1997 ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்டார்.
பின்னர் இலங்கை அணியில் அசத்திய அவர், நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண போட்டித் தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.