↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


1000 திரைப்படங்களுக்கும் மேலாக இசையமைத்து உலக சாதனை புரிந்து இசைஞானி இளையராஜா, அனுஷ்கா நடித்துள்ள 'ருத்ரம்மாதேவி' படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிக்காக கடந்த வாரம் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு கிளம்பி சென்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இளையராஜா, அந்த படத்தின் பின்னணி இசை பணியை நேற்று முதல் ஆரம்பித்துவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது. லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஏஞ்சல் ஸ்டுடியோவில் அவர் ருத்ரம்மாதேவி படத்தின் பின்னணி இசையை அமைத்து கொண்டிருப்பதாகவும், இன்னும் ஒரு வாரம் அங்கேயே தங்கி இந்த பணிகளை முடித்துவிட்டு அதன்பின்னர் நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. லண்டன் ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோவில் தான் 'டைட்டானிக்' உள்பட பல ஹாலிவுட் சூப்பர் ஹிட் படங்களின் பின்னணி இசை அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்கா ஷெட்டி, ராணா, அல்லு அர்ஜூன், பிரகாஷ்ராஜ், சுமன், நித்யா மேனன், கேதரீன் தெரசா, ஜெயப்பிரகாஷ், மதுமிதா, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ள ருத்ரம்மாதேவி படத்திற்கு அஜயனன் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ள இந்த படத்தை ரூ.70 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் குணசேகர். இந்த படம் வரும் மே அல்லது ஜூனில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top