
அஜீத், விக்ரம், ஜெயம் ரவி, மாதவன் என முன்னணி ஹீரோக்கள் ஜோடியாக நடித்த சதா நகைச்சுவை நடிகர் வடிவேலு ஜோடியாக ‘எலி' படத்தில் நடிக்கிறார். தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்குகிறார். 1960களின் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அடுத்துள்ள பின்னி மில் வளாகத்தில் நடக்கிறது. இதற்காக ஜொலிக்கும் வீடு, பழமையான வீடு, வில்லனின் ரகசிய இருப்பிடம் என 15க்கும் மேற்பட்ட அரங்குகளை தோட்டா தரணி அமைத்திருக்கிறார். இதில் 15 நாட்களுக்கும் மேலாக மும்பை நடன கலைஞர்கள், நடன இயக்குனர் தாராவின் நடன அமைப்பில் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. வடிவேலுவுடன் ஜோடியாக நடிப்பதுபற்றி சதாவிடம் கேட்டபோது,‘படத்தின் கதையும், புதுவிதமான எனது கதாபாத்திரமும் கவர்ந்ததால் இதில் நடிக்க சம்மதித்தேன்‘ என்றார். ஏப்ரலில் இதன் படப்பிடிப்பு முடிந்து மே மாதத்தில் படம் திரைக்கு வர உள்ளது.
0 comments:
Post a Comment