↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இளையராஜா போன்ற இசையமைப்பாளர்கள் சிம்பொனியை உருவாக்க லண்டன் அல்லது புடாபெஸ்ட் செல்கிறார்கள். இங்கு நம் ஊரிலேயே உலகத் தரத்திலான சிம்பொனி இசைக்குழுவை உருவாக்க சன்ஷைன் குழுவை தயார்படுத்தி வருகிறேன், என்று ஏ ஆர் ரஹ்மான் கூறியுள்ளார்.
சென்னையில் கேஎம் இசை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியை உருவாக்கி நடத்தி வருகிறார் ஏ ஆர் ரஹ்மான். இக்கல்லூரியின் சன்ஷைன் இசைக்குழு மூலம் மாணவர்களுக்கு இசைப்பயிற்சி அளிக்க ஹர்மேன் இந்தியா நிறுவனம் இணைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளில் 200 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர்.
இதுகுறித்த அறிவிப்பை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து கூறினார் ரஹ்மான். அவர் கூறுகையில், "சன்ஷைன் இசைக்குழுவில் பயிலும் மாணவர்களை பெர்க்லீ பல்கலைக்கழகத்தில் இசைப் படிப்பு படிக்க அனுப்ப உள்ளோம். இசை குறித்த படிப்பை வழங்குவதில் முன்னணியில் உள்ள பெர்க்லீ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பயிற்சி பெற வேண்டும் என்பது என் ஆசை.
அந்த பல்கலைக்கழகத்தில் நான் சேர விரும்பி விண்ணப்பிக்க தயாரானபோதுதான் ‘ரோஜா' வாய்ப்பு வந்தது. இதுவா, அதுவா? என்ற சூழல் வந்தபோது ‘ரோஜா' படத்துக்கு இசையமைக்கும் வேலையில் இறங்கினேன். பின்னாளில் அதே பல்கலைக்கழகம் எனக்கு டாக்டர் பட்டம் அளித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.
இளையராஜா போன்ற முக்கிய இசையமைப்பாளர்கள் சிம்பொனி இசைக்கோர்ப்புக்காக லண்டன், புடாபெஸ்ட் செல்கின்றனர். இங்கு நம் ஊரிலேயே உலகத் தரத்திலான சிம்பொனி இசைக்குழுவை உருவாக்கவே சன்ஷைன் குழுவை தயார்படுத்தி வருகிறேன். அடுத்த 5 ஆண்டுகளில் இங்கு இசை பயில்பவர்கள் சர்வதேச அளவில் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். சிம்பொனி இசை என்றாலே வெளிநாட்டுக்குதான் செல்லவேண்டும் என்ற நிலை இனி இருக்காது. தமிழ்நாட்டிலேயே அதை பெறமுடியும்," என்றார்.
Home
»
cinema
»
cinema.tamil
»
ilayaraja
»
rahman
» இனி இளையராஜா லண்டன் போக வேண்டாம்... - ஏஆர் ரஹ்மான்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.