↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த அசின், இந்தி கஜினி மூலம் பாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வந்தார். ஆனால் சில படங்களின் தோல்வியால் அசின் வாய்ப்பிழந்து சிலகாலம் வீட்டில் சும்மா இருந்தார். கடைசியாக பாலிவுட்டில் கில்லாடி 786 என்ற படத்தில் நடித்தவர், இப்போது அபிஷேக் பச்சன் உடன் ஆல் இஸ் வெல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைதளங்களில் தன் பெயரில் போலியாக இருக்கும் அக்கவுண்ட்களை தடுக்க சொல்லி புகார் செய்ய இருக்கிறார் அசின்.

இதுகுறித்து அசினின் உதவியாளர் கூறியுள்ளதாவது, சினிமா நட்சத்திரங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்ள, நடிகை அசினின் பெயரில் சிலர் போலியாக அக்கவுண்ட் துவக்கியுள்ளனர். இன்ஸ்ட்ராகிராம் தவிர்த்து வேறு எந்த சமூக வலைதளத்திலும் அசின் இல்லை என்பதை இங்கு தௌிவுப்படுத்தி கொள்கிறோம். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க சொல்லி அசின் வலியுறுத்தியுள்ளார், சட்டப்படி நாங்கள் நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top