↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

8வது ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக டிக்கெட்டுகள் விற்பனை நாளை தொடங்குகிறது. 8-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 8-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை நடக்கிறது. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், மொகாலி, அகமதாபாத், ஐதராபாத், புனே, ராய்ப்பூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இப் போட்டி நடைபெறுகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 லீக் போட்டிகள் நடைபெறுகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-ந் தேதியன்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதும் ஆட்டம் இரவு 8 மணிக்கும், 11-ந்தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதும் ஆட்டம் மாலை 4 மணிக்கும், 25-ந் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடனும் மோதும் ஆட்டம் இரவு 8 மணிக்கும் 28-ந்தேதி கொல்கத்தா நைட்ரைடர்ஸுடன் மோதும் ஆட்டம் இரவு 8 மணிக்கும்,

மே 4-ந்தேதி மாலை 4 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனும் மே 8-ந்தேதி இரவு 8 மணிக்கு மும்பை இந்தியன்ஸுடனும் , மே 10-ந்தேதி இரவு 8 மணிக்கு ராஜஸ்தானுடனும் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகின்றது சென்னையில் நடை பெறும் முதல் 2 போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் ஆடுவதற்காக தடை தொடர்ந்து நீடிக்கிறது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top