இத்தாலியின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றான் மிலனின்(Milan) மையத்தில் Palace of Justice என்ற நீதிமன்றம் அமைந்துள்ளது.
இந்த நீதிமன்றத்திற்கு வங்கி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட Claudio Giardiello என்ற நபரை நீதிமன்ற விசாரணைக்கு சற்று முன்பு பொலிசார் அழைத்து வந்துள்ளனர்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த அந்நபர் திடீரென தனக்கு எதிராய் சாட்சியளித்த நபர் மற்றும் நீதிபதியை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளான்.
இந்த தாக்குதலில் நீதிபதியான Fernando Ciampi என்பவரும் சாட்சியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, அந்த குற்றவாளி நடத்திய துப்பாக்கி சூட்டில் மற்றொரு நபரும் பலியாகியுள்ளதாக தெரிகிறது.
துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்துள்ள அந்த குற்றவாளி தற்போது வரை உள்ளேயே இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பொலிஸ் காவலில் வந்த அந்த குற்றவாளியிடம் துப்பாக்கி எப்படி வந்தது என தெரியாத காவல் துறையினர், குற்றவாளியை கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து,துப்பாக்கி சூட்டை நடத்திய குற்றவாளியை பொலிசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
0 comments:
Post a Comment