↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தன் படத்தை எதிர்த்த இந்து அமைப்பினர்களுக்கு கமல் பதிலடி - Cineulagam
பிரபல கன்னட நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் உத்தம வில்லன். இப்படம் மே 1ம் தேதி திரைக்கு வருவுள்ளது. இந்நிலையில் இந்து கடவுளை கமல் தவறாக சித்தரித்துள்ளார் என்று சில அமைப்புகள் கொடு பிடித்தது.
இதை தொடர்ந்து நேற்று ஒரு முஸ்லீம் அமைப்பினரும் தங்கள் ஆதரவை அளித்து கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்று போலிஸாரிடம் மனு கொடுத்தனர்.
இதுக்குறித்து கமல் கூறுகையில் ‘ சென்சார் தரப்பு சான்றிதழ் அளித்த பிறகு எந்த தேவைக்காகவும் காட்சிகளை கத்தரிக்க முடியாது. மேலும் பழமையான கம்பர் எழுதிய வரிகளில் இருந்துதான் இதை எடுத்துள்ளோம். இதில் எவ்விடத்திலும் எந்த மதத்தையும் குறிக்கவில்லை’ என கூறியுள்ளார்
மேலும் படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் கூறுகையில் ‘யாருடைய மனதையும், உணர்வுகளையும் புண்படுத்தும்படியாக ‘உத்தமவில்லன்’ படத்தில் எந்த காட்சியும் இடம்பெறவில்லை. 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு நாடகக் கலைஞருக்கும், தற்கால கலைஞருக்கும் இடையேயான வாழ்க்கைப் பதிவு சார்ந்த படம். இந்த படத்தை தணிக்கை குழுவினர் பார்த்துவிட்டு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். எந்த இடையூறும் இல்லாமல், திட்டமிட்டபடி படம் ரிலீஸாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top