
கடந்த மார்ச் மாதம் 24ம் திகதி பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான ஜேர்மன் விங்க்ஸ் விமானத்தில் பயணம் செய்த 150 பேரும் பலியாகினர்.
இந்த விபத்து நடந்த இடத்திற்கு பலியானர்களின் உறவினர்கள் சென்று அஞ்சலி செலுத்த, லூஃப்தான்சா(Lufthansa) விமான நிறுவனம் இலவசமான விமான சேவையை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிலையில் விமான விபத்தில் பலியான ஆசிரியரின் உறவினர் எனக் கூறிக்கொண்டு பெண் ஒருவர் தன்னுடன் மூன்று பேரை அழைத்துக்கொண்டு விபத்து நடந்த இடத்திற்கு இலவசமாக பயணம் செய்துள்ளார்.
இதை உண்மை என நம்பிய விமான நிறுவனமும் அவரை அழைத்து சென்று வந்துள்ளது.
பின்பு அங்கிருந்து அதே காரணத்தை கூறிக்கொண்டு இலவசமாக பயணம் செய்து ஜேர்மனிக்கு திரும்பியுள்ளார்.
இந்த தகவலை கேட்ட பலியான ஆசிரியரின் தந்தை, தனக்கு அந்த பெண் பெயரில் எந்த உறவினரும் கிடையாது என்றும், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அவர் இலவசமாக பயணம் செய்து வந்துள்ளார் எனவும் விமான நிறுவனத்திற்கு தகவல் அனுப்பினார்.
இதனை தொடர்ந்து, ஜேர்மனியின் Beverungen நகரை சேர்ந்த அந்த பெண்ணை விசாரணை செய்ததில் அவர் ஆசிரியரின் உறவினர் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
தற்போது இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார், விசாரணையை நடத்தி வருகின்றனர்.
விமான விபத்தில் பலியானவர்கள் குறித்து உறவினர்களும் பொது மக்களும் துக்கத்தில் உள்ள நிலையில், இந்த சூழ்நிலையை தவறாக பயன்படுத்தி இரக்கமின்றி செயல்ப்பட்ட அந்த பெண்ணின் நடவடிக்கை உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.