
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'கத்தி' திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்த காரணத்தால் அந்த படம் பெரும் ஒருசில தமிழ் அமைப்புகளால் பெரும் பிரச்சனைகளை சந்தித்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மீண்டும் ஒரு பிரமாண்டமான படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடித்து வசூலில் சாதனை புரிந்த 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகம் படத்தை ரஜினியுடன் இணைந்து ஷங்கர் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே 'லிங்கா' பிரச்சனையை தற்போதுதான் முடித்து விட்டு ரஜினி நிம்மதியாக உள்ளார். இந்நிலையில் மீண்டும் ஒரு பிரச்ச்னையில் சிக்க அவர் முன்வருவாரா? என்பது கேள்விக்குறிதான். இருப்பினும் லைகா நிறுவனமும், ஷங்கர் தரப்பும் இந்த படம் குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment