ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்(Kabul) குல்னாஸ்(Gulnaz) என்ற ஏழை பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு, அந்த பெண்ணிற்கு 16 வயதிருந்தபோது அவர், திருமணமான தன் உறவினர் Asadullah என்பவரால் வலுக்கட்டாயமாக கற்பழிக்கப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் சட்டப்படி, இளவயதில் கற்பழிப்புக்கு உள்ளாக்கப்பட்டால் அந்த பெண்ணிற்கு சிறை தண்டனை விதிக்கப்படுவதால், குல்னாஸிற்கும் 12 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கற்பழிப்பிற்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்ட அவர் கர்ப்பமானதால், சிறைக்குள்ளேயே குழந்தையை பெற்றெடுத்தார்.
சில காலத்தில் அந்நாட்டு ஜனாதிபதி கருணை காட்டியதால், பல்வேறு நிபந்தைனைகளுடன் அவருக்கு விடுதலை அளிக்கப்பட்டது.
இதன்பின் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அந்த பெண் அளித்த பேட்டியில் பேசியதாவது, எனக்கும் தன்னுடைய குழந்தைக்கும் உரிய பாதுகாப்பு அவசியம் என்றால், என்னை கற்பழித்தவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அரசு அதிகாரிகள் வலியுறுத்தியினர்.
எனவே என் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்ற ஒரே அச்சத்தால் தான் என்னை கற்பழித்தவரையே திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன்.
மேலும், சமுதாயத்தில் அவப்பெயருடன் வாழ்வதைவிட நான் இறந்து போயிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
தற்போது Asadullah-வை திருமணம் செய்து மூன்றாவது முறையாக கர்ப்பமாக உள்ள அவர், அவருடன் வாழ்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் பழைய நினைவுகளை எண்ணிப்பார்ப்பது தேவையில்லாதது எனவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் கூறுகையில், அவரை நான் திருமணம் செய்யாமல் விட்டுருந்தால், அவரது குடும்பம் உள்பட இந்த சமுதாயமே அவரை புறக்கணித்திருக்கும்.
மேலும், தற்போது மகிழ்ச்சியான வாழ்க்கையையே அவர் நடத்தி வருகிறார் என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment