↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பொதுவாகவே சினிமாத்துறையில் ஒரு வெற்றிடம் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. அதாவது முன்னணி ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் ஒரு காலகட்டத்தில் அந்த முதன்மை இடத்தை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டியிருக்கும். அதிலும் தற்போது புது ஹீரோயின்கள் அதிகமாக அறிமுகமாகி வெற்றியும் பெற்று விடுகின்றனர். இதனால் ஹீரோயின்கள் எப்போதும் கவனமாகவே இருக்கின்றனர்.

தற்போது தெலுங்கு சினிமாவில் புது அறிமுகங்கள் கலக்கிக்கொண்டு இருக்கும் நேரம் இது. டோலிவுட்டில் சில முன்னணி ஹீரோயின்கள் திருமணத்தை நோக்கியோ அல்லது கேரக்டர் ரோல்களில் மட்டுமே நடிப்பதால், அந்த இடத்தை நோக்கி தற்போது இரண்டு இளம் அழகு தேவதைகளான ராகுல் ப்ரீத் சிங்கும், ஆதா ஷர்மாவும் போட்டி போடுவதாக தெரிகிறது. 

ராகுல் ப்ரீத் சிங்

முதலாவதாக ராகுல் ப்ரீத் சிங்கின் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளது. பல நடிகர்கள் தனக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் தான் வேண்டும் என்று கூறும் அளவிற்கு அவருடைய வளர்ச்சி உள்ளது. அவர் தற்போது பிரபல நடிகர்களுடன், ராமோடு பண்டக செஸ்கோ, ரவி தேஜாவோடு கிக் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இது தவிர பிரபல ஹீரோ ராம் சரணோடும், ஜூனியர் என்டிஆருடனும் நடிக்கிறார். மேலும் கப்பர் சிங் 2, அல்லு அர்ஜுன் படத்திலும், பிரபாஸ், சுஜீத் படத்திலும் நடிக்க இருக்கிறார். அவர் சினிமா இண்டஸ்ட்ரியில் நுழைந்த பொது பிரபல நடிகையான காஜல் படங்களை அதிகம் பார்த்தாராம். அவருடைய நடிப்பு ஆற்றலை பார்த்து நிறைய கற்று கொண்டாராம். மற்ற நடிகைகள் மீது தனக்கு நல்ல நட்பு மற்றும் மரியாதை உள்ளது என்று அவர் கூறி இருக்கிறார். 

ஆதா ஷர்மா

இரண்டாவதாக அழகு தேவதையான ஆதா ஷர்மாவும் முன்னணி இடத்திற்கு வருவதற்கான ரேசில் இருக்கிறார். இவர் பாலிவுட்டில் அறிமுகமாகி அதற்கு பின் பிரபல இயக்குனரான பூரி ஜெகன்நாத்தால் டோலியுட்டில் ஹார்ட் அட்டாக் மூலம் அனைவரின் இதய துடிப்பை பதம் பார்த்தவர். அவருடைய திறமையை பார்த்த மற்றொரு பிரபல இயக்குனரான திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ், சன் ஆப் சத்யமூர்த்தி படத்தில் அல்லு அர்ஜுனுடன் நடிக்க வைத்தார். அதிலும் இவர் சிறப்பாக நடித்துள்ளார். தற்போது இவர் கைவசமும் நிறைய படங்கள் உள்ளது. அவர் தற்போது கரம் படத்தில் பிரபல நடிகர் ஆதியோடு நடித்து வருகிறார். இந்த படம் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்ததாக அவர் சுப்ரமண்யம் பார் சேல் படத்தில் சாய் தரண் தேஜுடன் நடிக்கிறார். 

அவர் டோலிவுட்டில் அறிமுகமான நேரத்தில் அவருக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்டதற்கு சமந்தா மற்றும் நித்யா மேனன் என்று கூறினார். சமந்தாவிடம் இருந்து தான் நிறைய கற்று கொண்டதாக கூறினார். இரண்டு அழகு தேவதைகளும் முன்னணி இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி சென்று கொண்டு இருப்பதால் மற்றவர்கள் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top