↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், பாபநாசம் ஆகிய மூன்று படங்களுக்கும் தொடர்ச்சியாக இசையமைத்து சாதனை புரிந்த இளம் இசையமைப்பாளர் ஜிப்ரான், கமல்ஹாசனின் அடுத்த படத்திற்கும் இசையமைக்க விரைவில் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசனின் நான்கு படங்களை தொடர்ச்சியாக இசையமைத்த பெருமை இதுவரை இசைஞானி இளையராஜாவுக்கு மட்டுமே இருந்தது. தற்போது அந்த பெருமையை ஜிப்ரானும் பகிர்ந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கமல்ஹாசன் தனது அடுத்த படத்திற்காக மொரீஷியஸ் தீவுக்கு சென்றிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். மொரிஷியஸ் நாட்டில் விரைவில் தொடங்கவுள்ள கமல்ஹாசனின் த்ரில்லர் படத்திற்கு இசையமைக்க படக்குழுவினர் ஜிப்ரானிடம் பேசியுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த ஒப்பந்தத்தில் ஜிப்ரான் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் நடிக்கவுள்ள இந்த புதிய திரைப்படம் ஒரே இரவில் நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு விரைவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top