↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
திருவாரூர் மாவட்டத்தில் தாக்கப்பட்ட தனது காதலிக்கு மருத்துவமனையில் வைத்து வாலிபர் தாலி கட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் மேல காலனி வ.உ.சி. நகரை சேர்ந்த வரதராஜன் என்பவரது மகள் கலைச்செல்வியும், அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் இளையராஜாவும் காதலித்து வந்துள்ளனர்.

இதற்கு கலைச்செல்வியின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்த்தோடு, கலைச்செல்விக்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி, இந்த தகவலை காதலனிடம் தெரிவித்தோடு, அவரது காதலனுடன் சென்று அவரது வீட்டில் தங்கியுள்ளார்.
இது குறித்து ஊர் பஞ்சாயத்தில் முறையிடப்பட்டதால் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க நேற்று இரவு இளையராஜா அம்மாப்பேட்டை சென்றபோது, கலைச்செல்வி மற்றும் இளையராஜாவின் வயதான தாய் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.

அப்போது அங்கு சென்ற கலைச்செல்வியின் சித்தப்பாக்கள் கலியபெருமாள், ரகுபதி, இவரது மகன் ஆனந்த் என்கிற ரகுவரன், கலைச்செல்வியின் தம்பி மணிகண்டன் ஆகியோர், கோபத்தில் அரிவாளால் கலைச்செல்வியை வெட்டியுள்ளனர்.

பின்னர் இதுகுறித்து அரித்துவார மங்கலம் பொலிசில் புகார் அளித்ததை தொடர்ந்து, பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த கலைச்செல்வியை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், கலைச்செல்வி அனுமதிக்கப்பட்டு இருந்த தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த காதலன் இளையராஜா உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் இன்று காலை கலைச்செல்வி கழுத்தில் தாலி கட்டியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top