
இதற்கிடையில் ஷங்கர் இயக்கும் படம் அல்லது சுந்தர்.சி. இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கலாம் என கோலிவுட்டில் பேச்சு உள்ளது. ஆனால் சுந்தர்.சி. இதை மறுத்திருக்கிறார். ரஜினியிடம் இன்னும் கதை எதுவும் சொல்லவில்லை என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ‘எந்திரன்' , ‘ஐ' படத்தைபோல் மற்றொரு பிரமாண்ட படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டிருக்கிறார். அடுத்து ரஜினி படத்தை இயக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன் ரஜினி திடீரென்று மும்பை புறப்பட்டு சென்றார். புதிய பட கதை விவாதத்திற்காக ஷங்கர், புதுபட படப்பிடிப்புக்காக முருகதாஸ் இருவரும் மும்பையில் உள்ளனர். அங்கு இருவரும் ரஜினியை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.