↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்த உலகில் எந்த குறையுமின்றி இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், குறையோடு பிறந்தவர்களும் உள்ளனர். அவ்வாறு குறையில்லாமல் சாதித்தவர்களை விட, குறையிருந்து சாதித்தவர்கள் தான் அதிகம். அவர்களது சாதனைகளுக்கு அளவே இல்லை. இந்த காலத்தில் குறையில்லாமல் இருப்பர்களுக்கே, தன்னம்பிக்கை இல்லாமல், வாழ்வில் தோற்றுப் போய்விட்டால், மறுபடியும் அதிலிருந்து மீள்வதற்கு நீண்ட நாட்கள் அல்லது வருடங்கள் ஆகின்றன. ஏனெனில் அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. பின் எப்படி வரமுடியும்.

ஆனால் குறையோடு பிறந்தவர்களைப் பார்த்தால், அவர்களுக்கு குறை இருக்கிறது என்ற எந்த ஒரு எண்ணமும் இல்லாமல், தன்னம்பிக்கையுடன் எந்த ஒரு செயலையும் துணிச்சலோடு செய்து, சாதனை படைத்து வருகின்றனர். மேலும் சிலரும் குழந்தைப் பருவத்திலிருந்து குறை உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் கூட தனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று மனதை தளர விடாமல், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, சாதித்துள்ளனர். எனவே இத்தகையவர்களை பார்த்தாலாவது, எந்த குறையுமின்றி தன்னம்பிக்கை இழந்து இருப்பவர்கள், வாழ்க்கையை துணிச்சலோடு வாழ்ந்து காட்டி, ஒரு நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்க வேண்டும்.

சொல்லப்போனால் குறையோடு இருப்பவர்களை விட, குறையில்லாமல் இருப்பவர்களுக்குத் தான் தன்னம்பிக்கை குறைவாக இருக்கும். இப்போது அவ்வாறு குறையோடு இருந்தும், அதிலும் கேட்கும் திறனை இழந்தும் சாதித்த, வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் பிரபலமான சிலரைப் பற்றி பார்ப்போமா!!!


வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழிலதிபர்களில் ஒருவர் தான் தாமஸ் ஆல்வா எடிசன். இத்தகையவர் தான் தற்போது அனைவரது வீட்டில் எரியும் பல்புகளை கண்டுபிடித்தவர். இவருக்கு காது கேட்காது. ஏனெனில் குழந்தைப் பருவத்தில் இவருக்கு வந்த ஒரு நச்சுக் காய்ச்சல், அவரது காதில் உள்ள சவ்வை பாதித்து, காது கேட்டகாமல் போயிற்று.


இவர் ஒரு ஜெர்மன் இசையமைப்பாளர் மற்றும் இசைக்கலைஞர். அவரிடம் உள்ள ஒரு அற்புதமான ஒரு விஷயம் என்னவென்றால் இவருக்கும் காது கேட்காது. ஆனால் இவர் தனது திறமையால் ஒரு சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார். மேலும் இவரது காது செவிடு அடைந்திருப்பது, இதுவரை அவரது இசையில் ஒருபோதும் தெரிந்ததில்லை. அவ்வளவு எளிமையான முறையில் ஒரு பிழையுமின்றி இசையை அமைப்பார்.


இவர் ஒரு சிறந்த காது செவிடாக இருந்தும், தனது திறமையால் பெரிய சாதனையை புரிந்து, வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். அது என்னவென்றால், இவர் ஒரு அமெரிக்க எழுத்தாளர், அரசியர் ஆர்வலர் மற்றும் பேராசிரியர். இவர் பிறப்பிலேயே பார்வை மற்றும் கேட்கும் திறனை இழந்தவர் இல்லை. குழந்தைப்பருவத்தில் தாக்கிய ஒரு கொடுமையான நோயின் காரணமாக, இவரது பார்வை மற்றும் கேட்கும் திறன் போயிற்று. இருப்பினும் இவர் தன்னால் எதுவும் சாதிக்க முடியும் என்று மன தைரியத்துடன் போராடி, வாழ்வில் முன்னேறியுள்ளார்.

இவர் ஒரு அமெரிக்க நாவலாசிரியர், திரைக்கதை மற்றும் சிறுகதை எழுத்தாளர். இவரது நாவல்கள், அதிக விற்பனையான நாவல்களில் ஒன்றாக உள்ளது. இவருக்கும் கேட்கும் திறன் இல்லை. இவரது சிறந்த பணியால் அவர் அமெரிக்காவில் ஒரு பிரபலமான கேட்கும் திறன் இல்லாமல் சாதித்தவர்களில் ஒருவராக இருக்கிறார்.


ஜானி ரே ஒரு புகழ்வாய்ந்த அமெரிக்க பாடலாசிரியர், பாடகர் மற்றும் பியானோ வாசிப்பதில் சிறந்தவர். இவரும் இடைப்பட்ட காலத்தில் தான் கேட்கும் திறனை இழந்தார். ஆனால் பின்னர் தனது உழைப்பால், காது கேட்காமலும் இசையமைப்பதில் சிறந்தவர் என்று நிரூபித்துவிட்டார். பின் சில வருடங்கள் கழித்து, காது கேட்பதற்குப் பயன்படும் கருவியை உபயோகப்படுத்தி இசையமைக்க ஆரம்பித்துவிட்டார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top